சாலை அமைக்கும் பணியை தடுத்தவர் மீது வழக்கு

மணல்மேடு அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்தவர் மீது வழக்கு

Update: 2023-05-30 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள கீழமருதாந்தநல்லூர் தெற்குத்தெருவில் மயிலாடுதுறை ஒன்றியம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பணி சரியாக நடைபெறவில்லை என்றும் தரமற்ற சாலை போடுவதை அனுமதிக்கமாட்டோம் என்றும், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை கீழமருதாந்தநல்லூர் தெற்குத் தெருவை சேர்ந்த ராசு மகன் குருமூர்த்தி என்பவர் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் (வயது 55) அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்