சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி இம்மானுவேல் கீழத்தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது 55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை அளித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சப்பாணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.