வண்டல் மண் கடத்தியவர் மீது வழக்கு
செஞ்சி அருகே வண்டல் மண் கடத்தியவர் மீது வழக்கு
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம் இரவு ரோந்து சென்ற போது நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த காண்டிபன் மகன் சிலம்பரசன் செங்கல் சூளைக்காக ஏரியிலிருந்து வண்டல் மண்ணை டிராக்டரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சிலம்பரசன் மீது நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.