போக்சோவில் தொழிலாளி மீது வழக்கு
நிலக்கோட்டை அருகே சிறுமி திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே நோட்டகாரன்பட்டியை சேர்ந்தவர் வீரிய காளி (வயது 19). கூலித்தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் திருப்பூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பிணி ஆனார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.தும்மலப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அமலா ராணி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நிலக்கோட்டை போலீசில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரிய காளியை வலைவீசி தேடி வருகிறார்.