கேரளாவுக்கு ஜல்லிக்கற்களை கடத்த முயன்றவர் மீது வழக்கு

கங்கைகொண்டானில் இருந்து கேரளாவுக்கு ஜல்லிக்கற்களை கடத்த முயன்றவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-24 18:45 GMT

கயத்தாறு:

கங்கைகொண்டான் ரெயில் நிலையம் அருகில் ஜல்லிக்கற்களை அதிகளவில் குவித்து வைத்து, அதனை கேரளாவுக்கு கடத்த இருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மண்டல துணை தாசில்தார் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு முறையான அனுமதியின்றி அதிகளவில் ஜல்லிக்கற்களை குவித்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசாருக்கு வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அய்யலு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------

Tags:    

மேலும் செய்திகள்