நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரத்துக்கு உட்பட்ட 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பா.ஜனதாவை சேர்ந்த சுனில்குமார். இவர் சம்பவத்தன்று வடசேரி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கட்சி நிர்வாகிளுடன் சென்று அங்கு பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினார். இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் அனுமதியின்றி புகுந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டி சென்றதாக ரேஷன் கடை ஊழியர் வேல்விழி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுனில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.