புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இனுங்கூர் காசா காலனியில் உள்ள ஒரு பெட்டிகடையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 63) என்பவர் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.