காவலாளியை தாக்கிய மேலாளர் மீது வழக்கு

கோவையில் காவலாளியை தாக்கிய மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-24 20:45 GMT


சிங்காநல்லூர்


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 43). இவர் காளப்பட்டி நேருநகரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த அலுவலகத்தில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (31) மேலாளராகவும், மற்றொரு ரஞ்சித் (40) அலுவலராகவும் உள்ளார். சம்பவத்தன்று மோகனை, மேலாளர் ரஞ்சித் இரவு நேர பணிக்கு செல்லுமாறு கூறினார். அப்போதுஅவர் உடல்நிலை சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது.

ஆனாலும் மேலாளரின் வற்புறுத்துதலின்பேரில், அவர் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் மோகன் வேலைபார்க்கும் இடத்திற்கு சென்ற, மேலாளர் ரஞ்சித், அலுவலர் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சேர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும், மோகனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மேலாளர் ரஞ்சித், அலுவலர் ரஞ்சித் ஆகிய 2 பேர் மீதும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்