மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலங்குடி அருகே குப்பகுடி ஊராட்சி தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த பெண்ணுடன் வீரமுத்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வீரமுத்து, கவிதாவை உருட்டு கட்டையால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து கவிதா ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.