திருமங்கலம் யூனியன் கூட்டத்தில் ராஜினாமா செய்ய போவதாக கூறிய கவுன்சிலரால் பரபரப்பு - வளர்ச்சி திட்ட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார்

திருமங்கலம் யூனியன் கூட்டத்தில் ராஜினாமா செய்ய போவதாக கூறிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. வளர்ச்சி திட்ட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார் தெரிவித்தார்

Update: 2023-02-04 20:55 GMT

திருமங்கலம்

திருமங்கலம் யூனியன் கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் ஆண்டிச்சாமி பேசுகையில், மக்கள் தொண்டுகளை பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் மின்னல்கொடி: எனது ஒன்றிய கவுன்சிலர் பகுதிக்கு உட்பட்ட காண்டை, வாகைகுளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் கேள்வி கேட்கின்றனர். எனவே கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். அத்துடன் சில ஊர்களில் நடைபெற வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து எங்களது பகுதிகளுக்கு வளர்ச்சி திட்ட நிதி ஒதுக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என உறுதியாக தெரிவித்ததை அடுத்து கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவுன்சிலர் முருகன்: சுகாதார பணியின்போது எங்களுக்கு தகவலை தெரிவித்து விட்டு வர வேண்டும். இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆணையர் சங்கர் கைலாசம்: பணியை வாட்ஸ் அப்பில் தெரியப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் எனக் கூறினார். கவுன்சிலர்கள் பரமன், செல்வம், சிவபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்