கத்தியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்கு

அரக்கோணம் அருகே கத்தியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-06 17:29 GMT

அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த எத்திராஜ் மகன் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார். நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருல் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்