நிலப்பிரச்சினை: வாலிபரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
நிலப்பிரச்சினை காரணமாக வாலிபரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகதுருகம்,
கடலூர் சாயப்பட்டறை தெருவை சேர்ந்தவர் லியாக்கத் அலி மகன் ஜாவித்கான் (வயது 34). இவருக்கும் தியாகதுருகம் குமுதம் நகரை சேர்ந்த ஷேக் முகமது சாதிக் (53) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜாவித்கான் தியாகதுருகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து பெரிய மாம்பட்டு கிராம எல்லையில் உள்ள தனக்கு சொந்தமான நிலம் குறித்த விபரங்களை கேட்டுவிட்டு மீண்டும் கடலூர் செல்வதற்காக தியாகதுருகம் புக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் முகமது சாதிக், அவரது மகன் அத்னான் (19) ஆகியோர் ஜாவித்கானை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஷேக் முகமது சாதிக், அத்னான் ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.