தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

வந்தவாசி அருகே தம்பியை தாக்கிய அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-29 11:03 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே முளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 45). இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த இவரது அண்ணன் ரங்கநாதன் (50) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஆதிமூலம் என்பவரது வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரங்கநாதன் அவரது மகன் ராஜேஷ் (27) ஆகியோர் சேர்ந்து துரைமுருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து துரைமுருகன் அளித்த புகாரின்பேரில் ரங்கநாதன், ராஜேஷ் ஆகியோர் மீது தேசூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்