போக்குவரத்து விதிகளை மீறியதாக 97 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக 97 பேர் மீது வழக்கு
ஆனைமலை
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்டவற்றில் தனியார் விடுதிகளுக்கும் சொகுசு பங்களாவிற்கும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கம் முயன்றுள்ளனர். இதனை தடுக்க சுப்பையா கவுண்டன் புதூர், நஞ்சை கவுண்டன் புதூர் ஆனைமலை, முக்கோணம், சுங்கம், நா, மூசங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆனைமலை, ஆழியார், கோட்டூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதாக 20 வழக்குகளும் வாகனம் உரிமம், தலைக்கவசம் அணியாமல் செல்வது என 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கோட்டூரில் 25 வழக்குகள் பதிவாகின.