இரட்டை மடி வலை மற்றும் கரையில் மீன் பிடித்த 9 விசைப்படகுகள் மீது வழக்கு

இரட்டை மடி வலை மற்றும் கரையில் மீன் பிடித்த 9 விசைப்படகுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-10-11 19:47 GMT

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிலர் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறையினருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 படகுகள் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தெரிகிறது. மேலும், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 5 விசைப்படகுகள் மூலம் கரைப்பகுதிகளில் மீன் பிடித்துள்ளனர். விசைப்படகுகள் குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனை மீறி கரைப்பகுதியில் மீன்பிடித்த 5 விசைப்படகுகள் மீதும், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த 4 விசைப்படகுகள் மீதும் மீன்வளத்துறையினால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்