சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தோகைமலை அருகே காக்காயம்பட்டி 4 ரோடு பகுதியில் திருட்டை தடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக கொசூர், கம்புளியாம்பட்டி, வெள்ளமடை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பூபதி, தங்கவேல், அய்யப்பன், சுரேஷ், மாரப்பன், மகாமுனி, பாண்டியராஜன், ஆறுமுகம், தமிழரசன், மாலா, துரை உள்பட 80 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.