தந்தை, மகனை தாக்கிய 8 பேர் மீது வழக்கு
தந்தை, மகனை தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவருக்கும் பொதுப்பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி, ராமலட்சுமி, திரவுபதி, மகேந்திரன், திருமுருகன், செல்வேந்திரன், மகேஸ்வரன், ஈஸ்வரன் ஆகிய 8 பேரும் சேர்ந்து பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் அழகுராஜா(35) என்பவரையும் அவதூறாக பேசியதுடன் தாக்கி படுகாயப்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் தனுஷ்கோடி உள்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.