இந்து முன்னணியினர் உள்பட 75 பேர் மீது வழக்கு

இந்து முன்னணியினர் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-13 19:02 GMT

புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை தொடர்பான விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் சின்னப்பா பூங்கா அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தியதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல், பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், செல்வம் அழகப்பன் உள்பட 75 பேர் மீது கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்