அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலைக்கோட்டை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி உள்பட 700 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.