ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் பஸ்நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிங்காரவேலன், பார்த்திபன் உள்பட 7 பேர் மீது மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.