பரமத்தியில்லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் மீது வழக்கு

Update: 2023-08-01 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டாரத்தில் உள்ள பகுதியில் அதிக அளவு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தில் பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் மரவாபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை முத்து மகன் பிரபாகரன் வீட்டில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மரவாபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (47), பரமத்தி ஆயில் மில் தெருவை சேர்ந்த சிவா (29), பரமத்தியைச் சேர்ந்த சதாம் உசேன் (29), மற்றும் சாதிக் பாஷா (22), மறவாபாளையம் குடித்தெருவை சேர்ந்த பவன்குமார் (27), பரமத்தி முஸ்லிம் தெருவை சேர்ந்த மணிகண்டன் (29) உள்ளிட்ட 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்