மூதாட்டியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-21 17:47 GMT

அரிமளம் கீழாநிலைகோட்டை அருகே உள்ள கரையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 63). இவரது வீட்டு மாமரத்தின் இலை பக்கத்து வீட்டு பகுதியில் விழுந்ததாக தெரிகிறது. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும், மூதாட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமரைச்செல்வி உள்ளிட்ட 6 பேர் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கே.புதுப்பட்டி போலீசார் மூதாட்டியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்