கணவர்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்கு

கணவர்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-23 19:07 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி லெப்பைவளைவு உப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் மீரான் சாகிப் (வயது 36). இவருடைய மனைவி நஸ்ரின் பானு (36). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நஸ்ரின் பானுவின் பெற்றோர் 7 பவுன் நகைகளும், ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். இதுபோல மீரான் சாகிப், நஸ்ரின்பானுவிற்கு 10 பவுன் நகைகள் அணிவித்தார். பின்னர் நஸ்ரின்பானுவிடம் இருந்த 17 பவுன் நகைகளையும் தொழில் தொடங்குவதற்காக மீரான் சாகிப் வாங்கி சென்றார்.

பின்னர் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு நஸ்ரின் பானுவை கொடுமைப்படுத்தி, அவரை வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நஸ்ரின் பானு நாங்குநேரி கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், மீரான் சாகிப், அவருடைய தாயார் சஹர்பானு, உறவினர்களான ஏர்வாடி புதுக்குடி மேல தெருவை சேர்ந்த சலாவுதீன் மனைவி பல்கிஸ்பானு (45), சலாவுதீன் (45), மற்றொரு மீரான் சாகிப், ஆரிப் மனைவி பாத்திமா ஆகிய 6 பேர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்