அனுமதியின்றி கல் உடைத்த 6 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி கல் உடைத்த 6 பேர் மீது வழக்கு

Update: 2023-03-10 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து ஜல்லி, கல், எம்.சாண்ட் போன்றவை கனரக வாகனங்களில் தினமும் கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

சித்திரங்கோடு பகுதியில் அனுமதியுடன் இயங்கும் குவாரிகளை தவிர இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் சில கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் தங்க முனுசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அனுமதியின்றி கல் குவாரி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தின் உரிமையாளர் தங்க லெசி, இடத்தை குத்தகைக்கு எடுத்தவர் ஜெயசிங் ராஜா, பொக்லைன் எந்திர உரிமையாளர் மேசையகுமார், டிரைவர் அர்ஜூன், கல் உடைக்கும் எந்திர உரிமையாளர் அருள்செல்வன், டிரைவர் ராஜன் ஆகியோர் மீது திருவட்டார் போலிசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தங்க லெசி உள்பட 6 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்