வக்கீல் அலுவலகத்தை சூறையாடிய 5 பேர் மீது வழக்கு

வக்கீல் அலுவலகத்தை சூறையாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-23 19:22 GMT

வக்கீல் அலுவலகத்தை சூறையாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூறையாடல்

திருச்சி மேலசிந்தாமணி ஸ்ரீமாரியம்மன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வக்கீல் அன்புச்செல்வன் (வயது 47). இவர், திருச்சி பெரியகடை வீதியில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு பிரசாந்த், ஜஸ்டின், பிரவீன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வக்கீல் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, பெயர்பலகை உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி அலுவலகத்தை சூறையாடியதாக கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்ட வக்கீலை அவர்கள் தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் கைகளாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் வக்கீல் அன்புச்செல்வன் புகார் செய்தார். அதன்பேரில், பிரசாந்த், ஜஸ்டின், பிரவீன் உள்பட 5 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்