பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி கிளப்ரோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளிதரன் தலைமையில் போலீசார் அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கோத்தகிரியை சேர்ந்த ராபர்ட் (வயது 38) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 470 பணம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.