மீன் வியாபாரியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
மீன் வியாபாரியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
குளச்சல்:
குளச்சல் மரமடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58), மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் தற்போது ரீத்தாபுரம் பேரூராட்சி ஒற்றப்பனவிளையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கராஜ் குளச்சல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த வில்சன், தங்கராஜிடம் பேசுவதற்காக செல்போன் கேட்டார். செல்போனில் காசு தீர்ந்து போச்சு பேச முடியாது என கூறினார். இதனால் வில்சனுக்கு தங்கராஜ் மீது முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் தங்கராஜ் வழக்கம்போல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர் மரிய ஜாணுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் அங்கு வந்த வில்சன் மற்றும் கண்டால் தொியும் 4 பேர் சேர்ந்து தங்கராஜை தாக்கினர். இதை தடுத்த மரிய ஜாணையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயமடைந்த தங்கராஜ் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் வில்சன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.