இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 458 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 458 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
விருதுநகர்
விருதுநகர் தேச பந்துதிடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாவட்ட துணை செயலாளர் பழனிகுமார் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 212 பெண்கள் உள்பட 458 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மேற்படி 458 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.