அனுமதியின்றி மண் எடுத்த 4 பேர் மீது வழக்கு

மூன்றடைப்பு அருகே குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-26 17:13 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள ஆழ்வாநேரியைச் சேர்ந்த விவசாயி நிலத்திற்கு மண் பாதை அமைப்பதற்காக இட்டேரி தாமரைச்செல்வி குளத்தில் இருந்து அரசு அனுமதியின்றி மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அனுமதியின்றி குளத்து மண் எடுத்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பொக்லைன் எந்திரம், டிராக்டர், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்