கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக செந்தில்குமார் (வயது 36), ராமர் (வயது 48), மகேந்திரன் (வயது 41), கருப்பசாமி (வயது 38) ஆகியோரிடம் இருந்து 92 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த 4 பேர் மீதும் போலீசார் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.