வாலிபர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி அருகே வாலிபர்களை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சந்துரு (வயது 19). காமக்காப்பட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன் (20), சந்தோஷ் (21), சந்துரு (20), தினேஷ் 20). இவர்கள் 4 பேருக்கும், சந்துருவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின்போது மாடு விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் உள்பட 4 பேரும் கெங்குவார்பட்டியில் உள்ள சந்துரு வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சந்துருவிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அப்போது அதை தடுக்க வந்த அவரது அண்ணன் லிவின்குமாரையும் (23) தாக்கி விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த சந்துரு, லிவின்குமார் ஆகிய 2 பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கண்ணன், சந்தோஷ் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்