தகராறில் ஈடுபட்ட தாய்-மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
தகராறில் ஈடுபட்ட தாய்-மகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலாயுதம்பாளையம் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 25). இவர் பாலத்துறை வாய்க்கால் மேட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காந்தி நகர் 9-வது தெருவை சேர்ந்த தீபன் (21), அவரது தாய் சிவமணி (42), பாட்டி பாக்கியம் (65) ஆகிய 3 ேபரும் சேர்ந்து சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாதவார்த்தையால் திட்டி தாக்கினர். இதில் காயம் அடைந்த சரவணகுமார் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்ததகராறு குறித்து சரவண குமார், தீபன் ஆகியோர் தனித்தனியாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் தீபன், சிவமணி, பாக்கியம், சரவணகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.