பொக்லைன் எந்திரம் மூலம் கள்ளிச்செடிகளை அகற்றிய 4 பேர் மீது வழக்கு

உடையார்பாளையம் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் கள்ளிச்செடிகளை அகற்றிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-08 18:30 GMT

கோர்ட்டில் வழக்கு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை (வயது 64). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பாலமுருகனுக்கும் (43) பாகப்பிரிவினை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நேற்று முன்தினம் காலை பாலமுருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை அளக்க சென்றனர். அப்போது தம்பிதுரை மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து இப்போது இந்த இடத்தை அளக்க வேண்டாம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

4 பேர் மீது வழக்கு

இந்தநிலையில், நேற்று தம்பிதுரை மற்றும் அவரது சகோதரர்கள் இல்லாத நேரத்தில் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களான ஜெயராமன், ஆனஸ்ட்ராஜ், லெனின் ஆகிய 4 பேரும் சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் உள்ள கள்ளிச்செடிகளை அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தம்பிதுரை மற்றும் அவரது சகோதரர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தம்பிதுரை அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் பாலமுருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்