மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-17 21:21 GMT

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், புத்தானத்தம் அருகே குருமலைப்பட்டியில் உள்ள பனமரத்து கோவில் திருவிழாவை முன்னிட்டு நாடக நிகழ்ச்சி நடத்திட கோர்ட்டில் அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் இதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்குள்ள குளத்தில் நாடகம் நடைபெறுவதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், குளத்தில் நாடகம் நடத்தக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்