சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.13½ லட்சம் மோசடி-3 பேர் மீது வழக்கு
சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.13½ லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி வியாபாரி
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குகை பகுதியில் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் விவேகானந்த், பாப்பு பாய், மோகன் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 789-க்கு ஜவுளி வாங்கினர். ஆனால் அந்த தொகையை அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
3 பேர் மீது வழக்கு
இதில் சீனிவாசனிடம் ஜவுளி வாங்கி விவேகானந்த், பாப்பு பாய், மோகன் ஆகியோர் ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 789 மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.