கணவன்-மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
பூதலூர் அருகே கணவன்-மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
பூதலூர் அருகே உள்ள தொண்டராயன்பாடி கலப்பு காலனி தெருவில் வசித்து வருபவர் ஜாக்குலின் மேரி(வயது 35). இவரது வீட்டுக்கு அதே ஊரைச் சேர்ந்த சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர், ஜெயபால், சூர்யா ஆகிய 3 பேரும் வந்து ஜாக்குலின் மேரியின் கொழுந்தனாரை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஜாக்குலின்மேரி மற்றும் அவரது கணவர் ஜஸ்டினையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுகுறித்து பூதலூர் போலீசில் ஜாக்குலின் மேரி புகார் அளித்தார். அதன்பேரில், பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், பாஸ்கர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகிறார்.