உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 20:28 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள காளையார்குறிச்சி கிராமத்தில் மாடசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாணார்பட்டியில் உள்ள கட்டபொம்மன் காலனியை சேர்ந்த காளிராஜ் (வயது 28) என்பவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காளையார்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆலையின் உரிமையாளர் மாடசாமி, மேனேஜர் முத்துக்குமார், போர்மென் முத்துக்கருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்