2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த வட சிறுவலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் சதீஷ்(வயது 39). சென்னை தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், விஜயலட்சுமி(26) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரை அடுத்த ஆலம் பூண்டி பகுதியை சேர்ந்த அஞ்சலை(32) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட விஜயலட்சுமியை சதீஷ் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் மற்றும் அஞ்சலை ஆகியோர் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.