நெல், கரும்புகளை சேதப்படுத்திய 20 பேர் மீது வழக்கு
பெண்ணாடம் அருகே நெல், கரும்புகளை சேதப்படுத்திய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே மாளிகைகோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் ரகு (வயது 25). விவசாயி. இவர் பயன்படுத்தி வரும் 45 சென்ட் நிலத்தில் நெல், கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சிலர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, ஆயுதங்களுடன் வயலுக்குள் இறங்கி, ரகு பயிரிட்டுள்ள நெல், கரும்புகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ரகு பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அடையாளம் தெரியாத 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.