20 பேர் மீது வழக்கு

தேரோட்டத்தில் பிரச்சிைன செய்தது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-07 19:17 GMT

சிவகாசி, 

சாத்தூர் பெருமாள் கோவில் தேரோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின் போது சிலர் தேரோட்டத்துக்கும், பக்தர்களுக்கும் இடையூறு செய்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பரமேஸ்வரன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அஜித்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்