பேரூராட்சி செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு

பேரூராட்சி செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-09 18:30 GMT

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது மேட்டுமருதூர். இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக இருந்த 2.5 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் முள் செடிகள் அகற்றும் பணி வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் நில அளவீடு செய்து கல் ஒன்றும் பணி செய்ய மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன், குருவட்ட அளவையர், மண்டல துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் சென்று உள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வக்கீல் குமார் மற்றும் தியாகராஜன் ஆகிய 2 பேரும் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் குமார், தியாகராஜன் ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்