புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புன்னம் சத்திரம் ரெங்கம்பாளையம் பிரிவு சாலை அருகே ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த ராமன் (வயது 22), வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருேக ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த ரியாத் (22) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து 2 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.