மது-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

மது-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 20:27 GMT

முசிறி:

முசிறி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆணைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள முள்காட்டில் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 57) மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் கரூர் பொய்யாமணி தெற்கு தெருவை சேர்ந்த வரதராஜனின் மகன் ராஜா தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முசிறியை அடுத்த அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கடையில் விற்றது முசிறி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த 150 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்