அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தில் தகராறு:வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின்போது வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-16 18:45 GMT


கடலூர் குண்டுஉப்பலவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் அஜித் (வயது 20). இவர் சம்பவத்தன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தனது அண்ணன் ராஜவேலு (33) மற்றும் சிறுவர்களுடன் ஊர்வலமாக குண்டுஉப்பலவாடியில் பாட்டு போட்டு ஆடியபடி சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்பு என்ற இளஞ்செழியன், நெடுஞ்செழியன் ஆகியோரும் ஊர்வலத்தில் ஆடியதாக தெரிகிறது. இதை பார்த்த ராஜவேலு பக்கத்து தெருவை சேர்ந்த நீங்கள் எதற்கு இங்கு வந்து ஆடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும், ராஜவேலுவை ஆபாசமாக திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி அஜித் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்