விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-30 20:47 GMT

முசிறி:

முசிறியை அடுத்த சின்ன வேளக்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சியபோது, பெரிய வேளக்காநத்தத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கோபி(வயது 31) மற்றும் ஆனந்த் (29) ஆகியோர் அவரை தகாத வார்த்தையால் திட்டி, மோட்டாரை நிறுத்தி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்