சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-17 18:49 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் உள்ள ஓடையை முழுமையாக அகற்றக்கோரி நேற்று முன்தினம் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் விருகாவூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) புகார் அளித்தார். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி எஸ்.ஒகையூரை சேர்ந்த 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்