திருவட்டாரில் கடையின் பூட்டை உடைத்து திருடியதாக 15 பேர் மீது வழக்கு

திருவட்டாரில் கடையின் பூட்டை உடைத்து திருடியதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-21 18:32 GMT

திருவட்டார், 

திருவட்டாரில் கடையின் பூட்டை உடைத்து திருடியதாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துணிக்கடை

பள்ளியாடி கோணத்தை சேர்ந்தவர் யூஜின் (வயது39). இவர் திருவட்டார் பஸ் நிலையம் அருகில் துளசி பிறேமபாய் (55) என்பவரது கடையில் வாடகைக்கு துணிக்கடை நடத்தி வந்தார். யூஜினிடம் கடையை காலிசெய்யும்படி துளசி பிறேம பாய் கூறியுள்ளார். ஆனால் யூஜின் காலதாமம் செய்து வந்தார்.

இந்தநிலையில் கடை இருக்கும் கட்டிடம் குலசேகரத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடையின் பூட்டு உடைப்பு

அதன்பின்பும் யூஜின் கடையை காலி செய்யாமல் இழுத்தடித்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் சம்பவத்தன்று இரவு துளசி பிறேம பாய், ராஜசேகர், ஹமாறுதீன், குலசேகரம் அலாவூதீன், விளாக்கோடு சிவக்குமார் உள்பட 15 பேர் சேர்ந்து கடையின் பூட்டை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யூஜின் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பிறேமபாய், ராஜசேகர் உள்பட 15 பேர் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகளை எடுத்துச்சென்றதோடு, கடையில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றதாக கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடையின் பூட்டை உடைத்து திருடியதாக 15 பேர் மீது இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்