விதிகளை மீறிய 14 பேர் மீது வழக்கு

பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி விதிகளை மீறிய 14 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-19 18:34 GMT

பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2 மாத காலத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனுமதியின்றி ஊர்வலங்கள் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட நிகழ்வின்போது விதிகளை மீறி அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாகவும், வெடி வெடித்ததாகவும் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர், பார்த்திபனூர் பகுதியை சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்