போக்குவரத்து விதிகளை மீறிய 101 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறையில் ஜனவரி மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 101 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Update: 2023-01-31 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த வாகன சோதனையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 101 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகன பதிவு இல்லாமலும், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாமலும் உள்ள வாகனங்களை ஒட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்