சாலைமறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு

நாங்குநேரி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-04 19:18 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரத்தில் மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு நேற்று முன்தினம், இறந்த மூதாட்டியின் உடலுடன் பொதுமக்கள் நாற்கரசாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை- கன்னியாகுமரி நாற்கர சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள், போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்